
காதலித்து பார்..
தாயின் கட்டளை மீறி
ரேஷன் கடை வரிசையில் நிற்பதை மறுத்து
கால் கடுக்க வெகுநேரம் காத்திருப்பாய்
காதலிக்காக.
காதலித்து பார்..வலி தெரியாது.
உயிரினங்கள் உன்னதமானவைகளாக
தோன்றும்
காதலித்து பார்..
காலத்தின் அவசியம் உணர்வாய்
காதலித்து பார்..
காஷ்மீர் கூட குளிராது
காதலி பக்கம் இருந்தால்
காதலித்து பார்..
உனக்கு பிடித்தவைகள் கூட
உனக்கு தெரியாது, ஆனால்
அவள் ரசனைகள் உன் விரல் நுனியில்.
காதலித்து பார்..
மருத்துவம் படிக்காமேலேயே
வைத்தியம் பார்ப்பாய்
காதலிக்காக.
காதலித்து பார்..
உணர்வுகளில் உயர்ந்தது காதல்
ஒரு முறையேனும்
காதலித்து பார்..
வெறும் மண்தான்
அவள் நடந்து சென்றதால், அந்த
பாதசுவடுகளில் அவள் முகம் தேடுவாய்
காதலித்து பார்..
பஞ்சு விரல்களில்
பதித்த கோலங்களை தொடும்போது
அவளை தொட்ட ஸ்பரிசம் உணர்வாய்
காதலித்து பார்..
உலகிலேயே அவள்தான் அழகி என்பாய்
ஆனால், நீ வசிக்கும் தெரு பற்றி கூட
உனக்கு தெரியாது
காதலித்து பார்..
அவளை நிலவென்பாய்
மலரென்பாய்
மொழியென்பாய்.
அவளை
பார்க்காத நாட்களில்
பேசாத பொழுதுகளில்
உன் பூமியை,
வேற்று கிரகம் என நினைப்பாய்
காதலித்து பார்..
கற்பனை பெருகும்
நீயும் கவிஞனாவாய்
கையெழுத்து அழகாகும்.
அயன் பண்ணாமல்
ஆடை அணியமாட்டாய்.
முகம் பார்க்கும் கண்ணாடி
உன்னை கண்ட படி திட்டும்
போதுமடா என்று.
காதலித்து பார்..
நான்கு சுவர்களுக்குள் ஆயிரம் பேர்
இருப்பதாய் உணர்வாய்.
நீ இறந்த பின்
உன் கல்லறையின் செங்கல் கூட
அவள் பெயர் சொல்லும்
காதலித்து பார்..
என்னை அதிகம் பாதித்த, கவிரசு வைரமுத்துவின் "காதலித்துபார் ..."
படித்ததில், என்னுள் உதித்த கவிதைகள்.
November 2002
4 comments:
hi..nilav...
its rocking...hats off to u
excellent writings....
well done..
keep it up.
Hi nilav..
Gud.. But it seems u've written all these for ur special person.. Nice..
good man...keep on writing...all the best ....
Post a Comment