Saturday, October 4, 2008

ஏனெனில் இது உன்னால்.


இந்த துக்கம் கூட

எனக்கு இனிக்கிறது, ஏனெனில்

இது உன்னால் வந்ததால்.


பென்சிலால் கிறுக்கப்பட்ட கவிதை.


இரவு 11.45. July 17, 2004

கைபேசி காதல்...


விழிகள் அழ நினைக்கின்றன
கண்ணீர் போதவில்லை.
மனம் விம்மிக்கொண்டு இருக்கிறது
தூக்கம் இல்லாமல் துக்கத்தோடு
இன்று உன் அழைப்பு வராததால்.

*****************************************

நீ அழைக்காததால் என் கைபேசி தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்ள முயல்கிறது.. தடுத்து பார்த்து விட்டேன் முடியவில்லை.
முயற்சி தொடர்கின்றன உன் அழைப்பு வரும் வரை.

**********************************************
விண்மீன்கள் இல்லா வானம் போல
வானரங்கள் இல்லா வனம் போல
வராத உன் அழைப்புக்காக
என் கைபேசியும்...
*********************************************
என் மூளை, என் விழிகளை தூங்க கட்டளையிட்டு
வெகு நேரமாகிறது.
இருந்தும்
காத்திருக்கின்றன உன் அழைப்பு வராதா என்று.

இரவு 12.10. July 12, 2004


இன்று முதல்..

இன்று முதல், தேவதைகளை கல்லூரிகள் அனுமதித்தன.

முதல் தேவதையாய், என்னவள் கல்லூரிக்கு சென்றாள்.

இன்று முதல், இராணி மேரி கல்லூரி

தேவதைகள் மாதிரி  கல்லூரி என்று

பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.



அவள் கல்லூரி சென்ற முதல் நாள்.
June 21, 2004.

நீ என்னோடு இருந்தால்..


நிலவும் தொட்டுவிடும் தூரம் தான்

நீ என்னோடு இருந்தால்.


Feb 02, 2004

Thursday, October 2, 2008

ஒரு சாமான்யனின் கேள்வி..

நாங்கள் என்ன பெட்ரோல் விற்றோமா?
இல்லை எண்ணெய் கிணறுகள் தான்
எங்களுக்கு சொந்தமா?
பின்பு நீங்கள் மட்டும்

கறிவேப்பில்லை முதல்
காய்கறி வரை,

அரிசி முதல்
அல்வா வரை,

பாலிலிருந்து
பண்டம் வரை,

இன்னும் எத்தனையோ ...
விற்பது நியாயமா?

எங்களை போன்ற ஏழைகள்
உள்ளே நுழைய முடியாதபடி..
வண்ணமிட்ட விளக்குகளில்
உங்கள் முகம் பிரகாசிக்கலாம்.
ஆனால், எங்கள் வயிறு பசியால் இன்னும்
எரிந்து கொண்டுதான் இருக்கிறது.
இது, உங்களை சுடும் நாள் வெகு தொலைவில் இல்லை.


October 02,2008