Sunday, August 31, 2008

எனைப்பார்த்து..


வாழை தண்டல்ல உன் கால்கள்
கலச கோபுரங்கள்.

கொலுசுகளுக்கு எவ்வளவு
மகிழ்ச்சி பார்த்தாயா? 
உன்
கால்களில் இருப்பதால்.


எனைப்பார்த்து  ஏளனமாய் 
சிரிக்கிறது.

என்னால் முடியும்



பூவை கசங்காமல்


கட்டியணைக்க முடியுமா?


முடியும் 


என்னால் உன்னை.

நெருக்கம்



பெருமை பட்டு போனது அந்த வெண்ணிற ஆடை
நீ அதை அணிந்ததால்.


நான் மீண்டும் ஒரு முறை பிறந்தால் உன் உடைகளில்
ஒன்றாக பிறக்க வேண்டும்
உன்னிடம் நெருக்கமாக இருப்பதற்கு.


19/06/2002





நிலவுகள்



மின்னலே, வெண்ணிற ஆடை அணிந்தால்
பார்ப்பதற்கு கண்கள் மிஞ்சுமா?.


நீ அந்த உடையில்,
நிலவுகள் கூட்டமாய் வருவது
போலிருந்தது எனக்கு.


ஒரு இரவு வேளையில், வெண்ணிற இரவு உடையில் அவள். 19/06/2002.

வேண்டாம்



நிலவுக்கு வண்ணம் 
பூசினால்தான்
அழகா?.


என் நிலவே
உனக்கும் வேண்டாம் இந்த வீண்  அலங்காரங்கள். 

உன் அன்புள்ளவரை..



இரும்பென்றால் நிச்சயம் துரு பிடிக்கும்.


இதயமென்றால் ஒரு நாள் நின்று போகும்.


மனிதன் என்பவன் மரித்தே ஆவான்.


நான் சிரஞ்சீவி, மரணமில்லை எனக்கு


உன் அன்புள்ளவரை..

இயற்கை


ஒரு பெண் - ஒரு ஆண்

ஒரு வாழ்க்கை

ஒரு அன்பு

ஒரு நீ - ஒரு நான்

ஒரு உலகம்

இயற்கையின் விதிகளுக்கு மாறாதது

நம் காதல்.

உயிர்

"உயிர்" என்பது

புரதத்தின் கூட்டுப்பொருள் என்றார்

ஏங்கெல்ஸ் என்ற விஞ்ஞானி. ஆனால்

என் உயிர் என்பது உன் பெயர் கொண்ட

அந்த இரண்டெழுத்து மட்டுமே.

எட்டாவது அதிசயம்

உன்னை நான் மறந்தால் அதை
எட்டாவது அதிசயமாக
எழுதி வைக்க சொல்வேன்
நான் உயிரோடு இருந்தால்.

உன்னால் தான்

மறுக்க முடியாத உண்மை.

திரும்ப திரும்ப சொல்கிறேன்

உன்னால்தான் என்

கையெழுத்து அழகாகிறது.

எப்போது?

என்னை உன் அன்பால்
தினம் தினம் புதுபித்துக்கொண்டே இருக்கிறாய்.
உன்னால் தான் நான் இன்னும்
பழைசாகமல் இருக்கிறேன்,
குத்தகைக்கு எடுத்துள்ள என் மனதை
எப்போது சொந்தமாக்கிக்கொள்ள போகிறாய் ?

என் மரணம் என்பது....


என் மரணம் என்பது
உன் பாசம் என் மீது
இல்லாதபோது.

நான் மீண்டும் ஜனிப்பேன்
உன் விழிகள்
என் உடல் சாம்பலை காணும்போது.

உவமை


நீ - நான்
மீன் - நீர்
வானம்-நிலம்
தாய் - சேய்
கடல் - உப்பு

உணவு - உறக்கம்
இரவு - பகல்
இருள் - ஒளி
சூரியன் - வெப்பம்

இன்னும் எத்தனையோ உவமைகளின்
இலக்கனமாய் நம் காதல்.




கவிதை


உன்னை பற்றி நான் எழுதியவைகளை,

கவிதை என்று

எனக்கு நானே சொல்லி கொள்கிறேன்.

கண்ணாடி


அவள் ஒரு கண்ணாடி.

தினமும் அவளை பார்த்து

என்னை தெரிந்து கொள்கிறேன்.

Friday, August 29, 2008

பிரசவம்


உன் நினைவுகளை சுமக்கும்
என் பல வருட கர்ப்பம்
எப்போது நம் திருமண
குழந்தையை பிரசவிக்குமோ..?

அடியே

அடியே ! (செல்லமாய்)
தயவு செய்து செருப்பணியாமல் இந்த
வீதி மீது நடக்காதே.
உன் பாதம் பட்டு
நடக்க வழியில்லாமல் 
வீதியெல்லாம் ஒரே பூக்களாய் மலர்ந்து கிடக்கிறது.

ஓசை


நீ நடந்து வரும்பொது

கொலுசனியாமல் இருந்தாலும்

உன் பாதங்கள் ஒலிக்கின்றன.



முரண்

ஒரு அம்மன்
இன்னொரு அம்மனை பார்க்க
கோவிலுக்கு செல்வதா?

அவளும் அவளது தோழியும் கோவிலுக்கு சென்றிருந்தபோது
06/12/2002



சுவை


அணில் கடித்தால், கனியாகும் காய்கள் தான் இனிக்கும்.

ஆனால்
உன் இதழ்கள் பட்டதெல்லாம்
சுவைக்கும்.

காத்திருப்பு

உன் வருகை நோக்கி
காத்திருந்த என் விழிகள்
சொல்லும் என் காதலை.
தன் இருப்பு கொள்ளாமல்
தாவி வெளியே குதித்த
என் விழித்துளிகளும் கூட.

அவள் வருகைக்காக காத்திருந்த ஒரு மாலை நேரம் டிசம்பர் 06, 2002

பிரகாசம்


உனக்கு இருட்டில் கூட
பிரச்சனை இல்லை தான்.

உன் விழிகள் இரு விளக்கல்லவா?
அடடா, எத்தனை பிரகாசம்.

போட்டி

உன்னை பற்றி எழுத நினைத்தேன்.
வார்த்தைகள்
நான்தான் முதலில், நான்தான் முதலில்,
என்று சண்டையிட்டு கொள்கின்றன.


இறுதியில்....

உன்னைப்பற்றி எழுதமுடியவில்லையே
என்ற சோகத்தில்
என் பேனாவும், தன்னை மூடிக்கொல்லாமல்
கோபமாய் உறங்க சென்றது.

கல்லறை



கல்லறை செய்தேன்
என் காதலை புதைக்க.,
இனி, ஒன்றும் செய்ய முடியாது
என்று அவள் சொன்னதால்.

Thursday, August 28, 2008

உண்மை

உன்னை பற்றி நினைக்கும் போதெல்லாம்
பல சிறு சிறு பணி துகள்களை ஒரு சேர விழுங்குவது போன்ற ஒரு உணர்வு.


உன்னை பற்றி எழுத நினைத்தால்
கவிதை பிறக்கிறது,
கையெழுத்து அழகாகிறது
இது நிதர்சனமான உண்மை.

பெயர்சூட்டுவிழா



நிலவுக்கு பெயர்சூட்டுவிழாவாம்.
அதற்கான முதற்பெயரை முன் மொழிவேன்


உன் பெயரை நான்..











Wednesday, August 27, 2008

அழகு



இன்னும் அழகாகி கொண்டே போகிறது
அழகு கொண்ட என் பெயர்


நீ, மீண்டும் மீண்டும்
உச்சரிப்பதால்.

நிம்மதி




காதலே நிம்மதி என்றான்
ஒரு கவிஞன்.


ஆம் காதல் செய்தவன்
கல்லறையில் தான் நிம்மதி
பெறுவான்.

மனம்


என்னை மறந்தாயோ ?
உன்னிடம் மனமில்லையோ ?

பின்பு எப்படி என்னை நினைத்தாய்
மனமில்லாமல் ?

ஒ! நினைத்த மனதை வைத்து
இன்று மறந்தாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
நினைப்பதும், மறப்பதும்
ஒரே மனதை கொண்டு..

காலத்தின் பதில்




மறந்து விட்டு மறக்கவில்லை
என்றாள்.
மறக்க நினைப்பது நான்
என்றேன்.
மறக்க மாட்டேன்
என்றாள்.


மறந்து விட்டு, என்னை ஏன்
மறந்தாய் என்று


என்னையே கேட்கிறாள்
மறக்க முடியாமல்


மறந்தது
நீயா ...நானா..


காலம் பதில் சொல்லும்..











Tuesday, August 26, 2008

மறதி


காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் ...

என் காதலுக்கும், காதலிக்கும் ஞாபக மறதி...


நாங்கள் பழகிய பல வருட காதலை

சர்வ சாதாரனமாய் அவள் மறந்து விட்டாள்.

Thursday, August 21, 2008

எதிர்ச்செயல்




ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு என்கிறது
விஞ்ஞானம்....

நான் செய்த எந்த செயலுக்கு இந்த எதிர்ச்செயல் நீ என்னை மறந்தது.?

காதல்



விண்ணுக்கு சுற்றுலா சென்று வருகிறான் இன்றைய மனிதன்.
பிரபஞ்சத்தையே ஆய்வு கூடத்தில் அடக்கி விடுகிறான்.
மனிதனையே இன்னொரு நகல் செய்கிறான்.

மூளையும் நரம்பு மண்டலமும் இல்லாத மனிதனையே (ரோபோ) உருவாக்குகிறான் மனிதன்

மனித மூளைக்கு அப்பாற்பட்டவைகளை

இன்னும்... என்னனோவோ செய்கிறான்
ஆனால் பெண்ணின் மனம் புரியாமல் இன்னும்

சோக கவிதைகளில் காலம் கடத்துகிறான்...

ஒ! அறிவியலுக்கு அப்பாற்பட்டவையோ காதல் ?




வளர்ச்சி


"எதிர்மறைகளுக்கிடையே நடக்கும் போராட்டமே வளர்ச்சி" என்றார் மாமேதை லெனின்

ஆம் நம் காதலும் அப்படித்தான் போலும்!

எதற்கு இதயம்?

கடுகளவுகூட காதல் இல்லையோ
என்மேல் உனக்கு?
கையளவு இதயம் இருந்து என்ன பயன் ?!!




Wednesday, August 20, 2008

பொய்

உன்னையே நினைத்து கொண்டு..
உன்னை மறந்து விட்டதாய்
தினமும் ஒரு பொய் சொல்லி கொள்கிறேன் என் மனதோடு...

Tuesday, August 19, 2008

விளைவு..

உன்னை காதலித்த விளைவு தான்
இன்று நான்
மெல்ல.. மெல்ல கவிஞனாகி வருகிறேன்..

என் காதல்

காதலை புரிந்துகொள்ளவில்லை நீ, என் காதலை..
ஆனால் ...
உன்னை புரிந்து கொண்டது என் காதல்..

மரணம்

வாழ்கை கட்டுரையின் கடைசி புள்ளி மரணம்...

என் ஆசைகளின் கடைசி புள்ளி உன் பிரிவு (என் மரணம்)...

தண்டனை

நீ போன திசையெல்லாம் நினைவாய் உன்னை பின் தொடர்ந்தேனே
தெரியுமா உனக்கு?

அதற்கு தண்டனை தானா நீ என்னை மறந்தது...?

சுனாமி













சுனாமி
ஜப்பானிய வார்த்தையாம்...
உலக மொழியாகிவிட்டது
டிசம்பர் 26 க்கு பிறகு ...
***********
கடலே, உன் நிறம்மாற்ற
வேறு சாயம் கிடைக்கவில்லையா?
மொத்தமாய் பறித்து விட்டாயே
இத்தனை உயிர்களை.
************
கடல் அன்னையே
எந்த அன்னையும்
உணவையும், விஷத்தையும் ஒரு சேர
ஊட்ட மாட்டாள்.
உன்னை அன்னை என்றழைத்தோம்.
நீயோ, எங்களை
கடவுள் ஆக்கிவிட்டாய் உயிர் பறித்து.
***********
கடலே,
உன் உப்பு நீரை
ஒரு முறை பரிசோதித்து கொள்.
இரத்த வாடை வீசுகின்றதா என்று..
**********
கரையில் ஒதுங்கியது
மீன்களா மணிதர்களா?
மீன்கள் ஒதுங்கி பார்த்திருக்கிறோம்..
ஆனால் மனிதர்கள் இறந்து?
****************
சுனாமியால் உயிரிழந்த இளம் பிஞ்சுகளுக்கு....


பூக்களின் மேல் நீர் தெளிக்கலாம்
மூழ்கி எடுக்க கூடாது.
***************
அன்று, மீன் பிடித்து
மனிதன் சாபிட்டான்.
இன்று, மனிதன் பிடித்து
கடல் சாப்பிட்டது.
*********************
எங்கள் மெரீனா
இதுவரை காதலர்களின்
பிருந்தாவனம்.
இனி,
அது கல்லறைகளின் மாதிரி.
#######################
நாள்: டிசம்பர் 26, 2004. கருப்பு ஞாயிறு, காலை 8 மணி
"பொங்கல் அன்னிக்கி புள்ளைய
போய் பார்க்கணும்". --- தாய்.

"இன்னிக்கு பசங்கள வெளியே
அழைச்சுட்டு போகணும்". --- கணவன்.

இன்று, "நாத்திக்கிழமை
கோழி அடிச்சாகனும்" --- மனைவி.

இதோ, "இன்று ஒரு நாள் leave
இன்னிக்கு fulla விளையாடலாம்". --- சிறுவன்.

"அப்பாடா, இன்று ஒரு நாள் ஓய்வு.
நல்லா தூங்கனும்". --- வியாபாரி.

"Monday Test வேற.
படிக்கணும், ஒரே Bore.--- மாணவன்.

இவை எதுவுமே நிகழவில்லை, இவர்கள் உயிரோடு இல்லாததால்.....

இதழ்கள்

இரண்டு ஆப்பிள் துண்டுகளை
இணைத்து யார்?
உன் இதழ்கள்.
################
உலகிலேயே அதிக
தேன் உள்ள மலர்
எது தெரியுமா?
உன் இதழ்கள்.
##################
பத்திரமாக பார்த்து கொள்
உன் இதழ்களை.
கொத்திவிட போகின்றன கிளிகள்.

-- மார்ச் 08, 2004 அன்று எழுதியது.




என்னவள்

வானவில்லில் உயிர் செய்தது யார் ?

என்னவள் ..