Tuesday, August 19, 2008

சுனாமி













சுனாமி
ஜப்பானிய வார்த்தையாம்...
உலக மொழியாகிவிட்டது
டிசம்பர் 26 க்கு பிறகு ...
***********
கடலே, உன் நிறம்மாற்ற
வேறு சாயம் கிடைக்கவில்லையா?
மொத்தமாய் பறித்து விட்டாயே
இத்தனை உயிர்களை.
************
கடல் அன்னையே
எந்த அன்னையும்
உணவையும், விஷத்தையும் ஒரு சேர
ஊட்ட மாட்டாள்.
உன்னை அன்னை என்றழைத்தோம்.
நீயோ, எங்களை
கடவுள் ஆக்கிவிட்டாய் உயிர் பறித்து.
***********
கடலே,
உன் உப்பு நீரை
ஒரு முறை பரிசோதித்து கொள்.
இரத்த வாடை வீசுகின்றதா என்று..
**********
கரையில் ஒதுங்கியது
மீன்களா மணிதர்களா?
மீன்கள் ஒதுங்கி பார்த்திருக்கிறோம்..
ஆனால் மனிதர்கள் இறந்து?
****************
சுனாமியால் உயிரிழந்த இளம் பிஞ்சுகளுக்கு....


பூக்களின் மேல் நீர் தெளிக்கலாம்
மூழ்கி எடுக்க கூடாது.
***************
அன்று, மீன் பிடித்து
மனிதன் சாபிட்டான்.
இன்று, மனிதன் பிடித்து
கடல் சாப்பிட்டது.
*********************
எங்கள் மெரீனா
இதுவரை காதலர்களின்
பிருந்தாவனம்.
இனி,
அது கல்லறைகளின் மாதிரி.
#######################
நாள்: டிசம்பர் 26, 2004. கருப்பு ஞாயிறு, காலை 8 மணி
"பொங்கல் அன்னிக்கி புள்ளைய
போய் பார்க்கணும்". --- தாய்.

"இன்னிக்கு பசங்கள வெளியே
அழைச்சுட்டு போகணும்". --- கணவன்.

இன்று, "நாத்திக்கிழமை
கோழி அடிச்சாகனும்" --- மனைவி.

இதோ, "இன்று ஒரு நாள் leave
இன்னிக்கு fulla விளையாடலாம்". --- சிறுவன்.

"அப்பாடா, இன்று ஒரு நாள் ஓய்வு.
நல்லா தூங்கனும்". --- வியாபாரி.

"Monday Test வேற.
படிக்கணும், ஒரே Bore.--- மாணவன்.

இவை எதுவுமே நிகழவில்லை, இவர்கள் உயிரோடு இல்லாததால்.....

No comments: