Monday, September 5, 2022

 வானமே வெறிச்சோடி நட்சித்திரங்களற்று இருந்தது. 

காரணம் என்னவென்று நிலவிடம் கேட்டேன்.  அவை எல்லாம், 

வானிறங்கி, உன் வீடு தேடி 

உன் பிறந்தநாளுக்கு, உன்னை வாழ்த்த 

வந்திருப்பதாக சொன்னது.  

-- 2021


 பள்ளி,  கல்லூரியில் நமக்கு பாடங்களை எடுத்த ஆசிரியர்கள் ஒரு வகை. அனுதினமும் நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு தினம் தினம், ஒவ்வொரு நிமிடமும் பல பாடங்களை சொல்லித் தருகிறார்கள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஏன் சில நேரங்களில் நம் வளர்ப்பு பிராணி கூட  நமக்கு வாழ்க்கையின் அர்த்தமிகுந்த சில பாடங்களை சொல்லித் தரும். சில நேரங்களில் நம் நண்பர்கள் நமக்கு நம் வாழ்க்கையின் சில புரியாத விளக்கங்களையும், அர்த்தங்களையும் நமக்கு பாடமாக சொல்லித் தருவார்கள். நம்மைப் பெற்ற தாய் நமக்கு முதல் ஆசிரியர். நாம் கற்றுக் கொண்டது அனைத்துமே முதன் முதலில் தாயிடமிருந்து தான் இருக்கும். எனவே எல்லோருக்கும் பொதுவாகவே அம்மா தான் முதல் ஆசிரியர். பிறகு அப்பா. அம்மா- அப்பா இந்த இரண்டு பேருக்கு அப்பால் ஒரு ஆசிரியர் உண்டென்றால் அது சிறந்த நண்பனாக இருக்கக்கூடும். சில பேருக்கு ஒரு தம்பி நல்ல ஆசிரியராக இருப்பான், சில பேருக்கு ஒரு அண்ணன் நல்ல ஆசிரியராக இருப்பான். இவை இரண்டுமே வாய்க்க பெறாதவர்களுக்கு ஒரு தோழியோ அல்லது ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு நண்பனோ ஒரு நல்ல ஆசிரியராக இருப்பார்கள். ஒரு சின்ன எறும்பு கூட நமக்கு ஒரு பாடத்தை கற்றுத் தரும். ஒரு காகம் கூட சில நேரங்களில் நமக்கு வாழ்க்கையின் மகத்துவமான சில பாடங்களை கற்றுத் தரும்.  பள்ளி கல்லூரி படிப்பை தாண்டி நமக்கு நிறைய ஆசிரியர்கள் உண்டு.  புத்தகம் படிப்பவர்கள் என்றால் நாம் படிக்கும் புத்தகத்தின் வாயிலாக நமக்கு நிறைய நிறைய ஆசிரியர்கள் கிடைப்பார்கள். நமக்கு புத்தகத்தின் வாயிலாக நம் மனதுக்குள் ஊடுருவி நம்மை வழி நடத்துவார்கள். அவர்களுடைய எழுத்து நம் மனதில் ஊறி செயலாக மாறும்.  நல்ல புத்தகங்கள் நல்ல ஆசிரியர்கள். உலகில் ஆசான்கள் ஏராளம் ஏராளம் கற்றுக்கொள்ள தான் நமக்கு  விருப்பமும், உறுதியும் வேண்டும். அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்🤝


-05/09/22



 நட்சத்திரங்களை எண்ணி முடிப்பதற்குள் 

விடிந்து விடுகிறது. 

புதிய சிறகுகள் தேவை அதனிடம் 

சென்று எண்ணிக்கையை சரி பார்க்க 


  நிலவே,

 என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய்?
உன் வீடு கருவானம் ஆயிற்றே? நீலவானில் உனக்கென்ன வேலை?
--13/02/20


 ஆடைகள் வாங்கித்தா என கேட்டாய்.
ஏன் என்னை உடுத்திக் கொள்ள மாட்டாயா என கேட்க நினைத்தேன்😢


 என் காதல் மீது உனக்கு சந்தேகம் என்றால் உன் ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்,

  அறிவியலுக்கு புதிராக - புதிதாக சில பெயரிடப்படாத ரத்த அணுக்கள் உருவாகி இருக்கக்கூடும். பயம் கொள்ளாதே நான் கொண்ட தீவிர காதலினால், உன் உடம்பில் உருவாகியிருப்பது *எழில் அனுக்கள்*.

Sunday, August 29, 2010

நண்பர்கள்

என் தம்பியின் மறைவிற்கு பின், என் வாழ்வை இவ்வளவு தூரம் கடத்திய


பெரும்பங்கு என் நண்பர்களுக்கு மட்டும் தான்.

அவர்கள் தான் என்னுடைய பலம்.

விலை

வாழ்க்கையின் அடிப்படை என்னவெனில்


அதை எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

அந்த புரிதலுக்கான விலைதான் துன்பங்களும் ஏமாற்றங்களும்.

Saturday, July 4, 2009

வாழ்தல்.

"வாழ்வு நம் முன்வைக்கும் மகத்தான கேள்வி என்ன தெரியுமா?
இதுவரை நீ அடுத்தவருக்காக என்ன செய்திருக்கிறாய்? "


------- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

Monday, May 4, 2009

தம்பி, உனக்கிது சமர்ப்பணம்...

மண்ணுலகம் பார்த்த பணி
முடிந்ததென்று
மருத்துவம் பார்க்க
விண்ணுலகம் சென்றாயோ ?
இது முறையோ?
***********************
உன் மருத்துவ பரிந்துரை
புத்தகங்கள்
உன் புகழஞ்சலி பாட
தன்னை தாரைவார்த்து விட்டது.
*****************************
"தகுதி உள்ளவை பிழைக்கும்"
என்ற டார்வின் விதியும்
தோற்று போனதோ உன்னிடம்?
தகுதிகளை குவியல் குவியலாய்
தன்னகத்தே கொண்ட சிகரமே,
மருத்துவம் பார்க்க வந்த நீ
மண்பட்டு போனது முறையோ?
**********************************
உன் கல்லறையில் முளைக்கும்
செடிகளுக்கு நிச்சயமாக
மருத்துவ குணம் இருக்கும்.
************************************
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"
என்ற முதுமொழியின் அர்த்தத்தை
அதன் ஆழத்தை, வலியை
இன்று உணர்கிறேன் தம்பி
உன் பிரிவால்.
*********************************************
வாழ வந்தவனே,
வளமாக செழித்து வளர்ந்தவனே
உனக்கு வேராக இல்லையெனினும்,
நீராக இருந்தேனே.
நிழல் தருவாய் என நினைத்தோமே,
இன்று, நிலம் மூட நீ சென்றது
முறைதானா?
திரும்பி வருவாயா தம்பி
அழுது அழுது
என் கண்களே கரைந்து
விடும் போலிருக்கிறது...
************************************
நிரு,
உன்னை எத்தனை முறை
அழைத்திருப்பேன் இந்த 26 வருடத்தில்
உன் கல்லூரி நாட்களில்
உன்னிடம் அம்மாவைவிட
நான்தான் அதிகம் பேசியிருக்கிறேன்
தெரியுமா?
உன் கடைசி வார்த்தை, அந்த பேச்சு
என் மரணத்தின் விளிம்பிலும்
எனக்கு ஒலிக்கும்.
எனக்கு, தெரியவில்லை
உன் இழப்பை எப்படி மறப்பதென்று?
*******************************************
என் தம்பி மருத்துவன்
என்று தம்பட்டம் அடித்தேனே நான்
இன்று என்ன செய்ய?
நான் அங்ஙனம் செய்தது தவறா?
**********************************************
உலகம் போற்ற வளர்ந்திருப்பாய்,
யார் கண்டது
தீராத நோய்க்கும் புதியதொரு
மருந்தையும் கண்டு பிடித்திருப்பாய்
என்ன செய்ய?
உன் இழப்பு
மருத்துவ உலகிற்கே பேரிழப்பு.
**************************************
பீநிக்ஸ்சை போல்
மீன்டும் உயிர் பெற மாட்டாயா
என, என் மனம் கிடந்து
வெம்புகிறது.
*****************************************
இன்னும் கனவாகத்தான்
தெரிகிறது உன் இழப்பு
உறக்கம் களைந்து விழித்து விட
மாட்டோமா என நினைக்கிறேன்.
************************************************
உன் இழப்பால்
துடிக்கும் என் மன வேதனை
என்னால் உணர முடிகிறது.
ஆனால், நம் அம்மாவை
நினைக்கும் போது என் வேதனை
ஓர் கடுகளவுதான்.
***************************************************
முத்துநகர்
உன்னைபோன்று ஓர் மாணிக்கத்தை தரும் என
யாரும் நினைக்கவில்லை.

12/11/2008, கரைந்த கண்களோடு, கனத்த இதயத்துடன்




வெகு நாட்களுக்கு பிறகு..

எனதருமை தம்பி டாக்டர் நிருபன் சக்கரவர்த்தி மறைவிற்கு பின் வெகு நாட்கள் கழித்து இதோ உங்கள் முன்....

Saturday, October 4, 2008

ஏனெனில் இது உன்னால்.


இந்த துக்கம் கூட

எனக்கு இனிக்கிறது, ஏனெனில்

இது உன்னால் வந்ததால்.


பென்சிலால் கிறுக்கப்பட்ட கவிதை.


இரவு 11.45. July 17, 2004

கைபேசி காதல்...


விழிகள் அழ நினைக்கின்றன
கண்ணீர் போதவில்லை.
மனம் விம்மிக்கொண்டு இருக்கிறது
தூக்கம் இல்லாமல் துக்கத்தோடு
இன்று உன் அழைப்பு வராததால்.

*****************************************

நீ அழைக்காததால் என் கைபேசி தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்ள முயல்கிறது.. தடுத்து பார்த்து விட்டேன் முடியவில்லை.
முயற்சி தொடர்கின்றன உன் அழைப்பு வரும் வரை.

**********************************************
விண்மீன்கள் இல்லா வானம் போல
வானரங்கள் இல்லா வனம் போல
வராத உன் அழைப்புக்காக
என் கைபேசியும்...
*********************************************
என் மூளை, என் விழிகளை தூங்க கட்டளையிட்டு
வெகு நேரமாகிறது.
இருந்தும்
காத்திருக்கின்றன உன் அழைப்பு வராதா என்று.

இரவு 12.10. July 12, 2004


இன்று முதல்..

இன்று முதல், தேவதைகளை கல்லூரிகள் அனுமதித்தன.

முதல் தேவதையாய், என்னவள் கல்லூரிக்கு சென்றாள்.

இன்று முதல், இராணி மேரி கல்லூரி

தேவதைகள் மாதிரி  கல்லூரி என்று

பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.



அவள் கல்லூரி சென்ற முதல் நாள்.
June 21, 2004.

நீ என்னோடு இருந்தால்..


நிலவும் தொட்டுவிடும் தூரம் தான்

நீ என்னோடு இருந்தால்.


Feb 02, 2004

Thursday, October 2, 2008

ஒரு சாமான்யனின் கேள்வி..

நாங்கள் என்ன பெட்ரோல் விற்றோமா?
இல்லை எண்ணெய் கிணறுகள் தான்
எங்களுக்கு சொந்தமா?
பின்பு நீங்கள் மட்டும்

கறிவேப்பில்லை முதல்
காய்கறி வரை,

அரிசி முதல்
அல்வா வரை,

பாலிலிருந்து
பண்டம் வரை,

இன்னும் எத்தனையோ ...
விற்பது நியாயமா?

எங்களை போன்ற ஏழைகள்
உள்ளே நுழைய முடியாதபடி..
வண்ணமிட்ட விளக்குகளில்
உங்கள் முகம் பிரகாசிக்கலாம்.
ஆனால், எங்கள் வயிறு பசியால் இன்னும்
எரிந்து கொண்டுதான் இருக்கிறது.
இது, உங்களை சுடும் நாள் வெகு தொலைவில் இல்லை.


October 02,2008

Tuesday, September 30, 2008

என்ன நியாயம்?

இலவம் பஞ்சுகளை
எரிக்க


எரிமலை தீப்பிழம்பா?
என்ன நியாயம்.


இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்து. 85 குழந்தைகள் பலி.
அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
July 16, 2004. 12:15 pm.

எனவே வேண்டாம் உனக்கு....



என் பூவுக்கு, ஊசி போட்ட மருத்துவன் யார்?


இதோ ஒரு இதழ், ஊசி துளையினால் கண்ணீர் சிந்துகிறது.


இப்போது என்ன செய்ய?


எனவே வேண்டாம் உனக்கு, இனியெப்போதும் அந்த..............

அவளுக்கு உடம்பு சரியில்லையென்று தன் தந்தையுடன் மருத்துவமனைக்கு சென்று வந்தாள். Jan 06, 2003

Monday, September 29, 2008

காதலை பற்றி மாவீரன் பகத்சிங்..

".......காதல் ஒரு போதும் மிருக உணர்ச்சி அல்ல. காதல் மனித பண்பை உயர்த்துவதாகவே அமைகிறது. அது காதலர்களை என்றும் கீழ்நிலைக்குத் தள்ளுவதில்லை. உண்மையான காதலை யாரும் உருவாக்க முடியாது. அது எப்போது என்றும் கூற முடியாது. ஏனெனில் அது இயற்கையானது. ஒரு வாலிப ஆணும், வாலிப பெண்ணும் தங்கள் உணர்ச்சிகளை இரையாகமல் தங்களின் தூய்மையை பாதுகாத்துக்கொண்டே ஒருவரையொருவர் காதலிக்க முடியும்........"

------மாவீரன் பகத்சிங் தனது நண்பர் சுக்தேவ்க்கு எழுதிய கடைசி கடிதத்தில் இருந்து.

Monday, September 8, 2008

காதல் தேர்வு


வார்த்தைகளுக்கு பூஜ்யம் மார்க்.


உன் விழிகள் மட்டும் சதம் அடித்தது


நான் எழுதிய காதல் தேர்வில்.


ஜனவரி 04, 2003

மொழிகள்


உலகில் உள்ள மொழிகள் எத்தனை.

து ஒரு கேள்வி.

மன்னிக்கவும், இது கணக்கிலடங்கா

ஒவ்வொரு காதலர்களின் விழிகள்

பேசுவதும் ஒரு வித மொழியே.




ஜனவரி 02, 2003

பிரிவு


நிகழ்வுகளின் துவக்கமாய்

மௌனம்.

என் மரணத்தின் துவக்கமாய்

உன் பிரிவு.

ஏப்ரல் 13, 2003

உன்னையும் சேர்த்து...

இந்த பூமிக்கு நிலவு

ஒன்றல்ல


உன்னையும் சேர்த்து இரண்டு.



--ஜனவரி 02, 2003

Saturday, September 6, 2008

சோகம்


உன்னில் இருந்து உதிர்ந்ததால்

ரத்தம் சிந்தியே

சிவப்பாகி போனதோ

இந்த இதழ்கள்?


ஏப்ரல் 01, 2004.

மற்ற தேதியெல்லாம்....


நீ பூபெய்தியத்தை

இந்த உலகுக்கு அறிவித்த நாள்.

மற்ற தேதியெல்லாம்

பொறாமை கொண்டது

மார்ச்  மூன்றாம் நாளை பார்த்து.


மார்ச் 03, 2004. இன்றோடு எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறாள்.