
இமைக்க மறந்த நிமிடங்கள்
உண்டு. ஆனால்
உன்னை நினைக்க மறந்த
நாட்கள் இல்லை.
ஒரு 24 மணிநேரத்தில்
தூக்கத்தில் உன் நினைவில்லாமல் சில நாள்.
எனினும், சில நேரங்களில் கனவுகளாய்
தொந்தரவு செய்கிறாய்..
சில நேரங்களில் நினைவுகளாய்
தூக்கம் கெடுக்கிறாய்.
காலையில் விழித்தவுடன் நான் யார் என்பதை
உன் நினைவுகள்தான் எனக்கு ஞாபகப்படுத்தும்.
இதுவே என் ஒரு நாளின்
உன்னைப்பற்றிய நினைவுகள்.
அவளுக்கு கொடுத்த கடிதத்திலிருந்து..
October 2001.
October 2001.
No comments:
Post a Comment