Wednesday, September 3, 2008

பூ ஒன்று..


பூ ஒன்று பேசியது என்னிடம்

அவளைப்பற்றி.

சில கேள்விகள் தொடுத்தது.

மென்மையை தன்னிடம் இருந்து

பறித்ததாக குற்றம்

வாசம் இவள் கூந்தலுக்கு இடம்

மாறியதாக குற்றம்,

வாடாமல் இருக்கும் ரகசியம் என்ன என்றும்?

ஒ! நீ காதலிப்பதால் தானோ

அவள் இன்னும் வாடவில்லை

என்று தானே கேள்வி கேட்டுக்கொண்டு ..

குழப்பத்துடன்...உறங்க சென்றது.

பூ ஒன்று பேசியது என்னிடம்
அவளைப்பற்றி.

No comments: