Tuesday, September 2, 2008

விழிகள்..

பல நூறு காந்தங்களின்
வல்லமை படைத்தது
உன் இரு விழிகள்.
***************
விழிகளல்ல அவை
பள்ளிக்கூடங்கள்.
எனக்கு ஒவ்வொரு நாளும்
ஆயிரம் பாடம் சொல்லித்தருகிறது.
***************
X-ரே கதிர்களா
உன் விழிகள் ?
சதைகள் தாங்கிய என் எலும்பு கூடு
தாண்டி
என் இதயத்தை துளைக்கிறது.

இந்த இரு விழிகளும் எனக்கு சொந்தமானவை.

No comments: