Friday, September 5, 2008

வர்ணித்து காட்டுங்கள்


அவளை

மலரென்று வர்ணிப்பதா

வேண்டாம்

அவை வாடிவிடும்.


கொடியென்று வர்ணிப்பதா

வேண்டாம்

அவை ஒடிந்து விடும்.


கனியென்று வர்ணிப்பதா
வேண்டாம்

அவை கனிந்து விடும்.


நிலவென்று வர்ணிப்பதா

வேண்டாம்

அது தேய்ந்து, தோன்றும்.


மொழியென்று வர்ணிப்பதா

வேண்டாம்

அவை வழக்கொழிந்து விடும்.


ஓவியம் என்றால்

வேண்டாம்

அதற்கும் ஒரு விலையுண்டு.


எனவே, உலகிலுள்ள கவிஞர்களுக்கு

ஒரு வேண்டுகோள். எங்கே, என்னவளை

வர்ணித்து காட்டுங்கள் என்று....


06, December 2002


No comments: